LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

Share

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து தரிசனம் செய்த இம்மலையில் தற்போது வரையில் சித்தர்கள் உலாவி வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் ஆடி அமாவாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிக கூட்டம் இருக்கும் என்பதால் 2000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததாலும் கூட்டம் பெருவாரியாக பிரிந்ததற்கு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.