LOADING

Type to search

இந்திய அரசியல்

7ம் வகுப்பு மாணவிகளை கட்டையால் அடித்த ஆசிரியை பணியிடை நீக்கம்!

Share

வேலூரில் 3 மாணவிகளை கட்டையால் அடித்த சம்பவத்தில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் இளவம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கம்மார் பாளையம் பகுதியை சேர்ந்த மூன்று மாணவிகளும் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

மாணவிகள் வீட்டுப்பாடம் எழுதி வந்த நிலையில் சில இடங்களில் ஸ்கெட்ச் பேனாவால் எழுத வேண்டும், ஆனால் ஏன் சாதாரண பேனாவால் எழுதினீர்கள் எனக் கேட்டு மர ஸ்கேல் மற்றும் அருகில் இருந்த கட்டையால் கைகளில் அடித்துள்ளார். இதில் கைகளில் ரத்தம் கட்டி வீங்கிய நிலையில் மாணவிகள் அழுது கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை மேற்கொண்டு, மாணவிகளை தாக்கிய ஆசிரியை தீபலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.