LOADING

Type to search

இந்திய அரசியல்

மகளிர் உரிமை தொகை சென்னையில் மூன்று நாட்கள் சிறப்பு முகாம்

Share

சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்காக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்நாள் அன்று, கலைஞர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தகுதியான குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில் 1,428 நியாய விலைக் கடைகளிலும் இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் முடிவில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 380 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டு கட்ட முகாம்களிலும் பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையும், பிற்பகலில் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முந்தைய இரு முகாம்களும் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.