LOADING

Type to search

இந்திய அரசியல்

அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Share

மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க.வினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை, “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை” என்ற அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.