LOADING

Type to search

இந்திய அரசியல்

வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்கள் பறிமுதல்: நடிகர் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

Share

நவம்பர் 3ல் நேரில் ஆஜராக உத்தரவு

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல நடிகர் மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012 ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசென்ஸ் பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து யானை தந்தங்களை வனத்துறையிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மோகன்லால் அவருக்கு தந்தங்களை கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உட்பட 4 பேர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வனத்துறை சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து மோகன்லாலுக்கு தந்தங்களை வைத்திருக்க லைசன்ஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது. வனத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில வருடங்களாக வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது மோகன்லால் உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் அவர்கள் அனைவரும் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.