சந்திரயான் -3 திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் – இஸ்ரோ
Share
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், இன்று மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், இன்று மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டு, 6.04 மணிக்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந் தேதிக்கு தள்ளிப்போகலாம் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும். என இஸ்ரோ பதிவு செய்துள்ளது.













