LOADING

Type to search

இந்திய அரசியல்

இந்தியாவின் தேசிய அடையாளம் ஆகிறார் சச்சின் டெண்டுல்கர் – தேர்தல் ஆணையம்

Share

தேசத்தின் அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாட்டின் முகமாக சச்சின் டெண்டுல்கரை அங்கீகரிக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்களிப்பதன் அவசியம், நேர்மையான தேர்தல் உள்ளிட்டவை குறித்து சச்சின் டெண்டுல்கர் விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 10.45 மணி அளவில் தேசத்தின் அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.