LOADING

Type to search

இந்திய அரசியல்

திருவாரூர், நாகை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக, வருகின்ற 24 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து நாகை சென்று இரவு தங்குகிறார். பின்னர், 25 ஆம் தேதி காலை திருக்குவளையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், 26ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கடைசியாக, 27 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.