அர்த்தநாரீஸ்வரர் கோவிலை ரூ.2.82 கோடியில் சீரமைக்க தமிழக அரசு அறிக்கை வெளியீடு
Share
கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை ரூ.2.82 கோடியில் சீரமைக்க தமிழக அரசு ஒப்பந்த புள்ளி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் சீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் குத்தகை தொகை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 45 ஏக்கர் நிலத்தின் குத்தகை தொகையை கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.










