LOADING

Type to search

இந்திய அரசியல்

கலைஞர் மகளிர் உரிமை தொகை – திருவள்ளூரில் அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்

Share

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளான 2,170 மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் வகையிலான வங்கி ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டார்.