உதவி இயக்குனர்களுக்கு மடிக்கணினி பரிசளித்த பி.வாசு
Share
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான பி.வாசு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. இயக்குனர் பி.வாசு தனது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் பி.வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு மடிக்கணினிகளை பரிசாக வழங்கினார். இந்த கொண்டாட்டத்தில் ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் ராகவா லாரன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.













