LOADING

Type to search

சினிமா

லியோ படத்தின் இசை 30தேதி வெளியீடு

Share

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.