தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Share
தென்காசியின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் பெய்து வரும் திடீர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர்.
அதிக அளவிலான சுற்றுலா பயணி வருகையால் மெயின் அருவி மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளுக்காக காவலர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டதால், குற்றால மெயின் அருவி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் இல்லததால் சுற்றுலா பயணிகள் தாமாகவே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அருவி பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.













