LOADING

Type to search

சினிமா

என் உயிர் தோழன் படத்தின் கதாநாயகன் பாபு மரணம்

Share

என் உயிர் தோழன் திரைப்படத்தின் நாயகன் பாபு, உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுயிர் தோழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாபு. சேலத்தில் பிறந்த இவர் முன்னாள் அமைச்சர் ராஜாராமின் சகோதரி மகன். என் உயிர் தோழன் படத்திற்கு பிறகு பெரும் புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையானார். இந்த விபத்திற்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று இரவு உயிரிழந்தார்.