LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம் – அமைச்சரவையில் முடிவு

Share

ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயதசமிக்குள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிர்வாகத்தைத் தொடங்குவோம் என்றும், விசாகப்பட்டினத்தில் அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.