LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க கொள்கை-2023: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Share

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023″னை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.