LOADING

Type to search

இந்திய அரசியல்

குஜராத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து இரு துண்டானது – பாலத்தில் வந்து கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கின

Share

குஜராத் மாநிலத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று (செப் 24) மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன.

உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் விழுந்த சுமார் 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.