பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் – தமிழக அரசு பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன
Share
காவேரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ் சங்கம் உள்பட 150க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன.
அதே போல், இரவு 12 மணிக்குள் அனைத்து தமிழக பேருந்துகளும் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி திரும்பிவிட்டன. பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி, 400-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக அரசு பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் பெங்களூரு சென்று வருகின்றன. மேலும் சில தனியார் பேருந்துகளும் பெங்களூரு சென்றன. தமிழக அரசு பேருந்துகள், பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லைவரை மட்டும் சென்று வந்தன. தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.













