LOADING

Type to search

சினிமா

மீண்டும் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’

Share

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.