பாபநாசம் அருகே கைதொலைபேசி வெடித்து பெண் உயிரிழப்பு
Share
பாபநாசம் அருகே கைதொலைபேசியில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியபோது, கைதொலைபேசி வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வருபவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். கோகிலா கபிஸ்தலத்தில் கைகடிகாரம் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கடையில், கைபேசியில் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கைதொலைபேசி வெடித்து சிதறியது. இதையடுத்து கடை முழுவதும் தீப்பற்றி எறிந்தது.
பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கபிஸ்தலம் காவல்துறை, கோகிலாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைதொலைபேசி வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













