வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல்
Share
வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து 1982 முதல் 1988 வரை சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராக பதவி வகித்துள்ளார்.
பத்மபூஷண், எஸ்.எஸ்.பர்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கவுரவ மருத்துவர் பட்டங்களையும் பெற்றுள்ளார் இந்நிலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு குறித்து, முதல்வர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதன், இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற “டைம்” இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார்.
நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் – வோண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும் இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். 1989-ஆம் ஆம் ஆண்டு முதலமைச்சராக இருத்த கலைஞர் அவர்களிடத்தில் சுவாமிநாதன் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, 96-ஆவது பிறந்தநாள் காணவிருக்கும் சுவாமிநாதன் அவர்கள் நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது தற்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது.













