LOADING

Type to search

இந்திய அரசியல்

மர்ம காய்ச்சலால் 3 வயது குழந்தை பலி

Share

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் வட மாநில தம்பதியரின் 3 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் புரம் பகுதியை சேர்ந்தவர் ராம்ஜித். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடைக்கு வீடு எடுத்து கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது 3 வயது மகன் டிபிஹனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கன்வாடிக்கு சென்று வந்த குழந்தைக்கு உணவு கொடுத்து அவரது தாய் தூங்க வைத்துள்ளார். குழந்தைக்கு விட்டு விட்டு காய்ச்சல் வந்த நிலையில், உறங்கிய குழந்தை நீண்ட நேரம் கண் விழிக்காதததால் சந்தேகம் அடைந்து பெற்றோர், சிகிச்சைக்காக ஆவடி மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.