LOADING

Type to search

இந்திய அரசியல்

5ஆவது நாளாக நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

Share

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், இசை, ஓவியம், தையல் பயிற்சி ஆகியவற்றுக்கான பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மறுதேர்வு நடத்தும் முடிவை கைவிடக் கோரி, டெட் தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

டிபிஐ வளாகத்தில் பந்தல்கள் அமைத்து இரவு பகலாக குழந்தைகளுடன் ஆசிரியர்கள் தங்கியுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையில், அவர்கள் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால், 5ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமுல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். டெட்-ல் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்பவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் என மூன்று அமைப்புகள் தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

நேற்று அதற்கான ஆலோசனை நடத்தி 13 வகையான கோரிக்கையாக அதைப் பிரித்து இருக்கிறோம். ஏற்கனவே பல்வேறு சங்கங்களை நாங்கள் நேரில் சந்தித்து கோரிக்கை பெற்று நிதித்துறை அமைச்சரிடம், நிதித்துறை செயலாளரிடமும் ஆலோசனையை நானே நடத்தி உள்ளேன். முதலமைச்சர் அலுவலகத்திற்கும் தற்போது நடைபெறுகிற போராட்டத்தையும் கொண்டு சென்றிருக்கின்றோம், இதில் நிதி நெருக்கடி இல்லாமல் எதை உடனடியாக முதலில் அமுல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என்கின்ற உறுதிமொழி இருக்கிறது. பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்கள் தங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல் அதற்கு என்ன தீர்வு காண முடியுமா அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று எங்கள் பணிகள் இருக்கும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் கூறினார் .