LOADING

Type to search

சினிமா

விஜய் 68 படத்தில் இணைந்த மோகன், மீனாட்சி சவுத்ரி

Share

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தில் நடிகர் மோகன் மற்றும் நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தன்னுடைய 68வது திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இன்ற காலை நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் படக்குழுவுக்கு நெருக்கமான சிலர் மட்டும் கலந்து கொள்கின்றனர். மேலும் படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்குகின்றனர். அதில் அதிநவீன தொழில்நுட்பமான ஏ1 முறையில் பாடல் காட்சியை படமாக்குகின்றனர். அதற்கான படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த தொழில்நுட்பத்திற்காக நடிகர் விஜய் சமீபத்தில் லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கு அவருக்கு புகைப்பட வேலைகள் நடைபெற்றன. இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதில் ஏற்கனவே பிரியங்கா மோகன் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது இளம் நடிகையான மீனாட்சி சவுத்ரி இணைந்து இருக்கிறார். அதேபோல் தமிழ் ரசிகர்களால் மைக் மோகன் என்று கொண்டாடப்பட்ட நடிகர் மோகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரை தவிர பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளனர். பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.