LOADING

Type to search

இந்திய அரசியல்

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் ராமநாதபுரத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி..!

Share

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது.

நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஒன்றிணைந்து தூய்மை பணியானது நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அக்னி தீர்த்தம் கடற்கரை முதல் சங்குமால் கடற்கரை வரை என பல்வேறு இடங்களில் தூய்மை பணியானது நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் ராமநாதபுரத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி இந்த தூய்மை பணியில், இந்திய கடற்படை வீரர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் என 200க்கும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.