அயலான் பதிவேற்றத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Share
அயலான் படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களையொட்டி, திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. டைம் டிராவல் ஜானரில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கி தமிழ் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரவிக்குமார்.
ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அயலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முடிந்த நிலையில், அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்டநாட்களாக இந்தப் படம் நிலுவையில் உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில், அயலான் படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களையொட்டி, திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. இதையொட்டி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் வைரலானது.













