பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் – திரையுலகினர் இரங்கல்
Share
பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. தயாரிப்பாளர் வி.ஏ.துரை, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார். ரஜினியின் ‘பாபா’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் பல்வேறு படங்களை தயாரித்த வி.ஏ.துரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மனைவி, மகளை பிரிந்துள்ள வாழும் அவர், விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தநிலையில், உடல்நலக்குறைவால் நேற்று இரவு மரணமடைந்தார். இதையடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.










