LOADING

Type to search

சினிமா

‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவுபெற்றது

Share

இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த முன்னோட்டம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் அமைத்துள்ள பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், அடுத்தகட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.