LOADING

Type to search

உலக அரசியல்

ரஷிய வெளியுறவு அமைச்சர் ஈரான் பயணம் மேற்கொள்கிறார்

Share

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அக்டோபர் 19-ந்தேதி ஈரான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர், ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து பேசுகிறார். இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரான் மற்றும் மேற்காசிய மோதல் தொடர்பாக ரஷியா மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை செய்வார்கள் என தெரிவித்து உள்ளார். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு கடந்த ஏப்ரலில், அராக்சி பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேசினார். இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைப்பு வெளியிட்ட செய்தியில், ஒரே வாரத்தில் 12 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. அவற்றில் ஹார்மூஸ் ஜலசந்தியில் 10 முறையும், வளைகுடா பகுதியில் ஒரு முறையும், ஓமன் வளைகுடா பகுதியில் ஒரு முறையும் தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளது. இதுபோன்ற பதற்றம் நிறைந்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.