LOADING

Type to search

இலங்கை அரசியல்

புளொட்டின் 46 வது ஆண்டு விழா சாவகச்சேரியில் இடம்பெற்றது!

Share

பு.கஜிந்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா 19ம் திகதி அன்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சர்வதேச கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் நிதியில் இருந்து சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதார தொழிலாளர்களுக்கு மழை அங்கிகளும், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.