LOADING

Type to search

சினிமா

சந்தீப் பிரதீப் நடித்த ‘காஸ்மிக் சாம்சன்’ படம் நவம்பர் 26-ம் தேதி வெளியாகவுள்ளது

Share

அப்ஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் நடித்த ‘காஸ்மிக் சாம்சன்’ படம் நவம்பர் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. மலையாளத் திரையுலகில் உருவாகி வரும் புதிய பேண்டஸி ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘காஸ்மிக் சாம்சன்’. அப்ஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், வரும் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. சாதாரண பீட்சா டெலிவரி செய்யும் இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக அசாதாரண சக்திகள் கிடைக்கின்றன. அதன்பிறகு அவன் எதிர்கொள்ளும் சம்பவங்களையும், கற்பனை உலகில் நிகழும் அதிரடி திருப்பங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பேண்டஸி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் நிறைந்த இப்படம், வித்தியாசமான சூப்பர் ஹீரோ கதையை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சந்தீப் பிரதீப் ‘காஸ்மிக் சாம்சன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கேஷ் அவரது தந்தையாகவும், மியா ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும், அல்போன்ஸ் புத்திரன், ஹிப்ஸ்டர், அல்தாப் சலீம், அத்வைத் அஜய் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் சார்பில் சோபியா பால் மற்றும் மேனுவல் குரூஸ் டார்வின் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அப்ஜித் ஜோசப் மற்றும் அபிகர்ஷ் வசந்த் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். தீபக் டி. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிபி மேத்யூ அலெக்ஸ் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் ஆக்‌ஷன் கலைஞரான விளாட் ரிம்பர்க் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ‘காஸ்மிக் சாம்சன்’ திரைப்படம், சந்தீப் பிரதீப்பின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.