LOADING

Type to search

இந்திய அரசியல்

சவுதி விமான நிலையம் மீது தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Share

சவுதி விமான நிலையம் மீது தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மற்றும் சவுதி அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான ஷைபா எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். தம்மாம் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் காயமடைந்தனர். ஷைபா எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு இந்தியர் காயமடைந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.