LOADING

Type to search

இந்திய அரசியல்

‘தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டுமென’ மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்

Share

‘தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டுமென’ காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா? அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் மீதான இத்தகைய சுதந்திரத்தை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்தி வருகிறார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல்கள் எந்தவித பாகுபாடும் இன்றியும், நேர்மையாகவும் நடத்தப்பட்டால் யாரும் வெற்றி பெறட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.