LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார்

Share

 கேரளத்தின் புதிய ஆளுனராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார். தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் முழு நேர ஆளுனராக நியமிக்கப்பட்டு, கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். மேலும் கேரளத்தின் புதிய ஆளுனராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் 29-வது ஆளுனராக பதவியேற்றுக் கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-அமைச்சர் வி.டி.சதீசன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.