LOADING

Type to search

இந்திய அரசியல்

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Share

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடுத்த வாரம் ஒடிசா செல்ல திட்டமிட்டிருந்தார். அடுத்த வாரம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்கள் ஒடிசாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின்போது குடியரசு தலைவர் முர்மு தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மற்றும் ரைரங்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக குடியரசு தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசு தலைவர் முர்மு அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆகிய இரு தினங்களில் ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.