LOADING

Type to search

சினிமா

‘பேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி வெளியாகிறது.

Share

மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் மிதுன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜே. பி. நிர்மல் இசையமைத்திருக்கிறார். பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிச்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து  தயாரித்திருக்கின்றன. ‘பேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.