LOADING

Type to search

இலங்கை அரசியல்

குழந்தையை வைத்தியசாலையில் பிரசவித்து பின்னர் வீடு திரும்பிய இளம் தாய் கிணற்றில் விழுந்து மரணம்!

Share

– யாழ்ப்பாணத்தில் சோகம்.

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம் – தொல்புரம், கண்டாமை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாய் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிரசவத்தின் பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், 26ம் திகதி திங்கட்கிழமை வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

அன்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச் சென்றடைந்த அவர், இரவு 7.30 மணியளவில் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இந்த வேதனைக்குரிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.