LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அவுஸ்த்திரேலிய மற்றும் , நியூசிலாந்து தூதுவர்கள்

Share

பலாலி விமான நிலையத்தையும் ஆய்வு செய்தனர்!

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தூதுவர்கள், 27ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

26ம் திகதி தனித்தனியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இவ்விரு நாடுகளின் தூதுவர்களும், தமது விஜயத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டமையுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறை கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இவ்வாறான முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த நிலையிலேயே, தூதுவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அ ன்று பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.