LOADING

Type to search

சினிமா

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘நூறு கோடி வானவில்’ படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

Share

நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘நூறு சாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி, தற்போது ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், சித்தி இட்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல்காட்சி பதாகையை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதனுடன் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.