LOADING

Type to search

சினிமா

ராகவா லாரன்ஸ் நடிக்கம் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது

Share

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு  பதாகை வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். ஏற்கெனவே கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் தோன்றும் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் ரூ.150 கோடி பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை பென் மூவீஸ் சார்பில் ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ஆர்.வி. ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. புராணக் காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்குகள், கலை வடிவமைப்புகள் மற்றும் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு மஹாவீர் கர்ணன் திரைப்படத்தின் சிறப்பு பதாகையை வெளியிட்டுள்ளனர்.