வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எப்-18: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Share
செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜி.பி.எஸ். அமைப்பைப் போலவே, இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான ‘நேவிக்’ அமைப்பும் இருப்பிடத்தையும், நேரத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. வெளிநாட்டு வழி காட்டுதல் அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் தொழில் நுட்பத் தன்னிறைவை வலுப்படுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாட்டில் நடக்கும் பேரிடர்களால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை துல்லியமாக கண்காணிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2024-ம் ஆண்டிலிருந்து 2029-ம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு பணிகளில் இறங்கி உள்ளது. இதில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் பூமி கண்காணிப்பு, வழிகாட்டி மற் றும் உளவுத்துறை சார்ந்த பணிகளுக்காக ஏவப்பட உள்ளன. இந்தநிலையில், இஸ்ரோவின் லட்சியமிக்க வழிகாட்டும் ‘நேவிக்’ அமைப்பின் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவதுடன், பேரிடர்களையும் துல்லியமாக கணிக்கும் வகையில் 2 ஆயிரத்து 250 கிலோ எடை கொண்ட 2-ம் தலைமுறைக்குரிய ‘என்.வி.எஸ்-03’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.இதனை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து 24 மணிநேர கவுண்டவுனை முடித்துக்கொண்டு ஜி.எஸ்.எல்.வி- எப் 18 ராக்கெட் நேற்று இரவு 11.51 மணிக்கு தீப்பிழம்பை கக்கியவாறு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ராக்கெட் புறப்பட்ட 18 நிமிடம் 34 வினாடிகளில் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளைப் பொறுத்தவரை, அது பூமியைச் சுற்றி வரும் குறைந்தபட்ச தூரம் சுமார் 170 கி.மீ ஆகவும், அதிகபட்ச தூரம் சுமார் 37 ஆயிரத்து 23 கி.மீ. ஆகவும் இருக்கும் ஒரு நீள்வட்ட புவிநிலை சுற்றுப்பாதையில் 106 டிகிரி சாய்வு கோணத் தில் நிலைநிறுத்தியது. உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “என்விஎஸ்-03 செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டம், இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான ‘நாவிக் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்துவதில் முக்கியமான முன்னேற்றமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.













