LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்த தியாகிகளைப் போற்றுவோமென உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Share

தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்த தியாகிகளைப் போற்றுவோமென சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும் – மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.