LOADING

Type to search

இந்திய அரசியல்

அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாக திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்

Share

அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாக திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் உயிர் காக்கும் மருத்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பாமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன். எனழ எளிய நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருத்துகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், மாண்டியிரு அப்பா அவர்கள் 2014-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம் ‘அம்மா மருந்தகங்களை’ துவக்கினார். தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசு தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை விரிவாக்கம் செய்து, நோய்வாய்ப்பட்ட எழை, எளிய நடுத்தர மக்களின் உயிர்களைக் காத்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு ‘முதல்வர் மருந்தகம்” என்று பெயரை மாற்றி தனியாருக்கு வழங்கி, அம்ன மருந்தகங்களின் செயல்பாட்டை முடக்கியது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தகெ அரசும் இம்மருந்தகங்களை கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், தற்போதும் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள். மக்களின் உயிர் காக்கும் மருந்துகளின் விலையில், நிர்ணயிக்கப்பட்ட 30 சதவீத லாப வரம்பையும் தாண்டி விலை நிர்ணயம் செய்து விற்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வது மற்றும் இதர மருத்துகளின் விலை நிர்ணயம் குறித்த வழக்கு 27.10.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியாளர் அவர்கள், மருத்துவமனைகளில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது குறித்த மத்திய மாநில அரசுகளின் நிலையை தெளிவுபடுத்த உத்தவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் ரூ. 10-ஐ அரசே உயர்த்தி வசூலிப்பதால் அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 1200 கோடி முதல் ரூ. 1.600 கோடி வருமானம் ஈட்டும் என்று பெருமை பேசும் திரு. ஜோசப் விஜய்யின் அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நோய்ப் பிணியைத் தீர்க்க, அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்த அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திரந்து. மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து, தமிழக மக்களில் உயிர் காக்க முன்வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.