LOADING

Type to search

இந்திய அரசியல்

மணிப்பூரில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்

Share

மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு முதல் மெய்தி, குகி ஆகிய இனக்குழுக்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-அமைச்சராக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார். அதேவேளை, மணிப்பூரில் தொடர்ந்து அவ்வப்போது வன்முறை, பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாகா என்ற இனக்குழுவும் இந்த மோதலில் ஈடுபட்டு வருகிறது. குகி, நாகா இனக்குழுக்களுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் நானி மாவட்டம் கிக்ரு நாகா என்ற மலைக்கிராமத்தில் குகி, நாகா இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் துப்பாக்கி சூடு சம்பவங்களும் அரங்கேறின. இந்த துப்பாக்கி சூட்டில் குகி பிரிவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.