LOADING

Type to search

சினிமா

அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படம் நவம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது

Share

அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படம் நவம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மதுமிதா இயக்குகிறார். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளார். படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பணிகளையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் கதாபாத்திர பதாகை வெளியானது. இப்படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார். இப்படத்தில் சஞ்சனா நடராஜன் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லக்கி என்ற கதாபாத்திரத்தில் ஜாரா வினீத் நடிக்கிறார். 

படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளியிடப்பட்டுள்ளது. மாளவிகா பாடியுள்ள இப்பாடலில், அர்ஜுன் தாஸ் ராப் பகுதியைப் பாடியுள்ளார். அவரது தனித்துவமான குரலில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படம் வரும் நவம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.