போஸ் வெங்கட், பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம் விரைவில் திரைக்கு வருகிறது
Share
போஸ் வெங்கட், பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம் விரைவில் திரைக்கு வருகிறது. போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் பரபரப்பான துப்பறிதழ் படமாக உருவாகிறது. சி.கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் சார்பில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வையாளர்களுக்கு சொல்லும் இந்த கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி.கணேஷ் குமார், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது,” என்றார். இந்த திரைப்படத்திற்கு சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் சி. கணேஷ் குமாரே படத்தொகுப்பையும் கையாளுகிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.













