LOADING

Type to search

சினிமா

தனுஷ் நடித்த “ஓம்” படத்தின் “செஞ்சுடரே” பாடல் வெளியானது

Share

தனுஷ் நடித்த “ஓம்” படத்தின் “செஞ்சுடரே” பாடல் வெளியானது. ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் காணொளியைப் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர துணுக்கு காணொளி வெளியானது. அதில் நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் நடிகை ஸ்ரீலீலா ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓம் படத்திலிருந்து “செஞ்சுடரே” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சாய் அபியங்கர், ஹரிணி இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஆதேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.