LOADING

Type to search

சினிமா

சூர்யா நடிக்கும் “சீன்” படக்குழுவை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்

Share

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “சீன்” படக்குழுவை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சீன்’ படம் காலை 6 மணிக்கு வெளியானது. சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு காலை 6 மணி காட்சிகள் ஆரம்பமானது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்குத் திரண்டு வந்து பட வெளியீட்டைக் கொண்டாடினார்கள்.

இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘சீன்’ படம் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.10 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சீன்’ படத்தைப் பார்த்த கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், “இயக்குநர் ஜித்து மாதவனின் அற்புதமான திரைக்கதை மற்றும் நடிப்பு சூப்பர். இசையமைப்பாளர் சுஷின் மற்றும் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.