அனிருத் – காவ்யா மாறன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிகாந்த் கிரீஸ் சென்றுள்ளார்
Share
பிரபல இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதன்படி, நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் திருமண விழா நடைபெற இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேபோல், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் குடும்பத்தினருடன் கிரீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.













