சூரியாவின் கிரீடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல் “சீன்” திரைப்படம்
Share
சூரியாவின் கிரீடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல்லை பதித்திருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன். சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சீன். சூர்யா துப்பறியும் இலாகாவின் உயர் அதிகாரியாக இருக்கிறார். தொடர் கொலைகள் செய்துவரும் ஒரு சைக்கோவை சிறைபிடித்து சிறையில் அடைக்கிறார். அதன் பிறகு தனக்கு இவ்வேளையில் ஈடுபாடு இல்லாததால் வேலையை ராஜினாமா செய்வதாக அவரின் உயர் அதிகாரியான லாலுவுக்கு கடிதம் அனுப்புகிறார். அவரும் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. அதனால் தான் பிடித்து சிறையில் அடைத்தது உண்மையான குற்றவாளி இல்லை என்பதையும், உண்மையான குற்றவாளி வெளியிலிருந்துதான் அந்த கொலைகளை செய்கிறான் என்பதை புரிந்து கொள்கிறார். அந்த கொலைகளை யார் செய்கிறார்கள் என்பதை வேலை இழந்த சூர்யா தனியாக ஒரு துப்பறிவு குழுவை ஆரம்பித்து கொலைகாரனை தேடுகிறார். அந்த துப்பறிவு குழுவில் வேலைக்காக நஸ்ரியா நிரப்பப்படாத படிவத்தை சூர்யாவிடம் கொடுக்க நேர்கிறது. அப்போதுதான் சூர்யா கண்பார்வையற்றவர் என்பது நஸ்ரியாவுக்கு தெரியவருகிறது. அதை யாரிடமும் சொல்லக்கூபாது என்ற நிபந்தனையுடன் சூர்யா நஸ்ரியாவை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். எனக்கு என்ன வேலை என்று நஸ்ரியா கேட்க, நீதான் என்னுடைய கண் என்று சூர்யா சொல்கிறார். இவர்கள் இருவரும் அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பதுதான் சீன் படத்தின் மீதிக்கதை. சூர்யா மொத்த படத்தையும் தன்தலையில் சும்மாடு கட்டி தூக்கி சுமந்திருக்கிறார். தனக்கு கண்பார்வை இல்லை என்பதை மறைக்க அவர் ஆடும் ஆட்டம் அபாரம். ஒரு நகைச்சுவையாளராகவே படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தன்னை தாக்கவரும் கொலைக்காரக் கும்பலை நஸ்ரியா கராத்தே சண்டையில் பின்னி பிடலை எடுக்கும் காட்சியில், சூரியாவும் அந்த கொலைக்கார கும்பலுடன் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்யும் நடிப்பை பார்த்து நஸ்ரியாவுக்கு சண்டையிடுவதை சூர்யா சொல்லிக கொடுக்கிறார் என்று சண்டைக்காட்சியை வேடிக்கை பார்ப்பவர்கள் பேசிக்கொள்ளும் காட்சியில் திரையரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது. சூர்யா படம் முழுக்க ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். சூர்யாவின் தந்தையாக வரும் ஆனந்தராஜ் ஞாபக மறதி நோயாளியாக வந்த உச்சக்கட்ட காட்சியின் நிகழ்வுகளை விவரிக்கும் போது படம் பார்ப்பவர்களின் கைத்தட்டலை அள்ளிக் கொண்டு போய்விடுகிறார். அருமையான திரைக்கதை. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நஸ்லென் புதுவிதமான சைக்கோத்தனத்துடன் நடித்திருப்பது வில்லத்தனத்துக்கு மெருகூட்டியிருக்கிறது. ஆனந்தராஜ், லால் ,ராஜ்பிரியன் என அத்தனைபேரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக நடித்திருக்.கிறார்கள். வினீத் அகஸ்தியனின் ஒளிப்பதிவும் சுஷின் ஷியாமின் இசையும் படத்தின் ஒட்டத்துக்கு திரைக்கதையோடு பின்னிப் பிசைந்து ஒன்றிப்போயிருக்கிறது. சூரியாவின் கிரீடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல்லை பதித்திருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.













